புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த மும்பை: பரபரப்பு தகவல் 

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 13வது போட்டியில் மும்பை அணி மிக அபாரமாக 48 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவில் மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 2 வெற்றி மற்றும் 2 தோல்வி என்ற அடிப்படையிலும் ரன்ரேடி அடிப்படையிலும் முதலிடத்தை பிடித்துள்ளது 

இரண்டாமிடத்தில் டெல்லி, மூன்றாமிடத்தில் கொல்கத்தா அணி உள்ளன. ராஜஸ்தான் நான்காவது இடத்திலும் பெங்களூர் 5-வது இடத்திலும் உள்ளன

நேற்றைய போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி 6வது இடத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7வது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

டெல்லி, ராஜஸ்தான், மும்பை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மாறிமாறி இருப்பது ஐபிஎல் போட்டிகள் பரபரப்பை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது

From around the web