சென்னை வெற்றியால் லாபம் அடைந்த மும்பை அணி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி!

 

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான 49வது ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலை இருந்ததையடுத்து 19வது ஓவரில் 20 ரன்கள் எடுத்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது

இந்த நிலையில் நேற்றைய வெற்றியால் சிஎஸ்கே அணைக்கு எந்தவித லாபமும் இல்லை என்றாலும் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று சிஎஸ்கே தோல்வி அடைந்திருந்தால் இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்காது

அதுமட்டுமன்றி நேற்றைய சிஎஸ்கே வெற்றி காரணமாக மும்பை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே 16 புள்ளிகளை பெற வாய்ப்பு உள்ளது. தோல்வி அடையும் அணி அதிகபட்சம் 14 புள்ளிகள் மட்டுமே பெறும்.

எனவே தற்போதைய 16 புள்ளிகள் இருக்கும் மும்பை பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி லீக் போட்டி முடிந்தவுடன் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும்

சிஎஸ்கே அணியின் நேற்றைய வெற்றியால் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பிளே ஆப் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததோடு, மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web