பெங்களூரு அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மும்பை

 

இன்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முதல் முதலாக தகுதி பெற்றது 

இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. படிக்கல் 74 ரன்கள் எடுத்தார்

இந்த நிலையில் 165 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்ததால் 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் கடைசி வரை அவுட் ஆகாமல் 79 ரன்கள் எடுத்தார். 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றதோடு மட்டுமில்லாமல் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web