3வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த மும்பை: டெல்லியை வெல்லுமா?

 
3வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த மும்பை: டெல்லியை வெல்லுமா?

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மற்ற அணிகள் டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் பேட்டிங்கை கடந்த சில போட்டிகளில் தேர்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குவிண்டன் டீகாக் மற்றும் ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நிலையில் டீகாக், ஸ்டோனிஸ் பந்துவீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார் இதனை அடுத்து தற்போது ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் விளையாடி வருகின்றனர்

mi vs dd

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர் என்பதும் சற்று முன்வரை மும்பை அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களை விவரங்கள் பின்வருமாறு

மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்

டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், ஹெட்மயர், லலித் யாதவ், அஸ்வின், ரபடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான்,

From around the web