மும்பைக்கு இதெல்லாம் டார்கெட்டே இல்லை: கப்பு உறுதியா?

 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. ஒரு கட்டத்தில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இந்த ஸ்கோர் ஓரளவு டீசன்ட்டான ஸ்கோர் என்றாலும் மும்பைக்கு எதிரான போட்டியில் இந்த ஸ்கோர் மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது 

இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் விளையாடி இந்த அளவுக்கு வரை கொண்டு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் 65 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி விளையாடவுள்ளது. மும்பை அணியில் மிகப்பெரிய பேட்ஸ்மேன் வரிசை உள்ளதால் இந்த இலக்கை மிக எளிதில் எட்டி விடும் என்றே கருதப்படுகிறது

குறிப்பாக டீகாக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா ஆகிய பேட்ஸ்மேன்கள் ஹிட்டர்களாக இருப்பதால் மும்பைக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்லை என்றுதான் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

From around the web