மீண்டும் சாம்பியன் ஆனது மும்பை: டெல்லி பரிதாப தோல்வி!

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த பட்டம் அந்த அணியின் 5வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது\

இன்று டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் 65 ரன்களும், ரிஷப் பண்ட் 56 ரன்களும் எடுத்தனர்.

rohit

இதனையடுத்து 157 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, டீகாக் மற்றும் ரோஹித் அதிரடியால் வேகமாக இலக்கை நோக்கி சென்றது. இடையில் டீகாக், சூர்யகுமார் யாதவ், ரோஹித், பொல்லார்ட் ஆகியோர் அவுட் ஆகிய போதிலும் இலக்கு குறைவு என்பதால் மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது

From around the web