குழந்தைங்களா... இந்த அடியை கடைசி வரைக்கும் மறக்க கூடாது: இம்ரான் தாஹிர் டுவீட்

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை பெற்ற சென்னை அணி, நேற்று திடீரென விஸ்வரூபம் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது 

வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் அடித்த பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை ரசிகர்கள் கண் கொள்ளா காட்சியாக பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றி குறித்து சென்னை அணியின் வீரர்களில் ஒருவரான இம்ரான் தாஹிர் தமிழில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: ’அடிச்சது யாரு? குழந்தைகளா... நாங்க அடிச்சா, அடிச்சது கடைசி வரைக்கும் மறக்காமல் இருக்கணும். வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எடுடா வண்டியை போடுடா விசில்’ என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் எதிர்பாராத காரணத்தால் இந்த தொடரில் விளையாட முடியாத ஹர்பஜன் சிங் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சாம்பியன் மீண்டும் எழுச்சி அடைந்துவிட்டனர். சிறப்பான ஆட்டம் பாய்ஸ்’ என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு டுவிட்டுகளும் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணியின் தோல்விகளை கடுமையாக விமர்சனம் செய்த சேவாக் உள்பட பல பிரபலங்களும் சென்னை அணியின் திடீர் எழுச்சியை பார்த்து ஆச்சரியம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web