பி.டி.உஷா சாதனையை முறியடித்த தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
பி.டி.உஷா சாதனையை முறியடித்த தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 24 ஆவது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.26 வினாடியில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் பிடி உஷா நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

22 வயதான தனலட்சுமி தமிழகத்தை சேர்ந்த திருச்சியை சேர்ந்தவர் என்பதும் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிடி உஷாவின் சாதனையை முறியடித்த தனலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது: 

dhanalakshmi

விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம்! தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்.
என்று வாழ்த்தியுள்ளார். 


 

From around the web