மிட்செல் மார்ஷல் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல்: புதிய வீரர் சேர்ப்பு

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சாளராக மிட்செல் மார்ஷல் காயம் காரணமாக திடீரென போட்டியிலிருந்து விலகியுள்ளார்

சமீபத்தில் நடைபெற்ற பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் ஓவரை வீச வந்த மிட்செல் மார்ஷலுக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் நான்கு பந்துகள் மட்டுமே வீசிவிட்டு போட்டியில் இருந்து வெளியேறினார் 

இருப்பினும் ஹைதராபாத் அணி வெற்றியின் விளிம்பில் இருந்ததால் வேறு வழியின்றி பேட்டிங் செய்ய களம் இறங்கினார். ஆனால் அவரால் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொள்ள முடிந்தது  என்பதும் அதற்குள் அவர் அவுட் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மிட்செல், ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாகவும், அவர் தனது சொந்த ஊருக்கு கிளம்பி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக பிரபல பந்துவீச்சாளர் ஜேசன் ஹோல்டர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது 

மிட்செல் மார்ஷ் விலகியது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் ஜேசன் ஹோல்டர் இணைக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு திருப்தி அளித்துள்ளது


 

From around the web