20வது ஓவரில் தோனி செய்த தவறு: சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

 

இன்று நடைபெற்ற டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 20வது ஓவரில் தோனி செய்த தவறால் சிஎஸ்கே அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்கள் எடுத்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 159 ரன்கள் எடுத்திருந்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிபெற 21 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது 

இந்த நேரத்தில் 20 ஓவரை வீச பிராவோ வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ஜடேஜாவை தோனி இறக்கினார். இரண்டு இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் நிலையில் இடது கையை பந்துவீச்சாளரை அதுவும் சுழல் பந்து வீச்சாளரை இறக்கியது மிகப்பெரிய தவறு என்று அப்போதே அனைவரும் கூறினர் 

அது மிகச் சரியானது போல் 3 சிக்சர்களை அடித்து அக்ஷர் பட்டேல் 19.5 ஓவர்களில் மேட்சை முடித்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து விட்டார். பிராவோ போன்ற ஒரு யார்க்கர் போடும் பவுலர் இருக்கும்போது ஸ்பின் பவுலர் ஜடேஜாவுக்கு தோனி ஓவர் கொடுத்து செய்த தவறின் காரணமாக சிஎஸ்கே அணியின் வெற்றியை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web