அதிசயம் ஆனால் உண்மை ராஜஸ்தான் அபார வெற்றி

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கிட்டத்தட்ட ராஜஸ்தான் அணி தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது 

ஏனெனில் முக்கிய பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ், பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா ஆகிய ஐந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

ஆனால் இதன் பின்னர் களத்திற்கு வந்த  இரண்டு இளைஞர்களான மற்றும் ராகுல் திவெட்டியா மற்றும் பராக் ஆகியோர் அதிரடியாக விளையாடி தலா 42 மற்றும் 45 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த அணியிடம் இருந்து சென்னை அணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

16வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 54 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. 4 ஓவர்களில் 54 ரன்கள் என்பதும் அதுவும் 5 விக்கெட் இழந்த நிலையில் சாத்தியமே இல்லை என்று எதிர்பார்த்த நிலையில் ராகுல் திவெட்டியா பவுண்டரிகளையும் சிக்சர்களையும் அடித்தார். இன்னொரு பக்கம் பராக் அதிரடியாக அடித்ததால் இந்த போட்டி ராஜஸ்தானுக்கு சாதகமாக முடிவடைந்துள்ளத

From around the web