தாறுமாறாக விளையாடிய மயங்க் அகர்வால்… பீதியில் தென் ஆப்ரிக்கா!!

தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர். முதல் நாள் மழையால் பாதிக்கப்பட ஆட்டம் நிறுத்தப்பட்டது, முதல் நாள் இந்திய அணி, விக்கெட் எதுவும்
 
தாறுமாறாக விளையாடிய மயங்க் அகர்வால்… பீதியில் தென் ஆப்ரிக்கா!!தாறுமாறாக விளையாடிய மயங்க் அகர்வால்… பீதியில் தென் ஆப்ரிக்கா!!

தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.


டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.

தாறுமாறாக விளையாடிய மயங்க் அகர்வால்… பீதியில் தென் ஆப்ரிக்கா!!

முதல் நாள் மழையால் பாதிக்கப்பட ஆட்டம் நிறுத்தப்பட்டது, முதல் நாள் இந்திய அணி, விக்கெட் எதுவும் இழக்காமல் 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மாயங்க் அகர்வால் 84  ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

பல நெருக்கடிக்கு இடையில் ஆடிய ரோஹித் ஷர்மா  இரட்டை சதத்தினை நெருங்கையில் துரதிஷ்டவசமாக, 176 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய புஜாரா 6 ரன்னில் வெளியேறிப் போனார்.

அடுத்து களமிறங்கிய கோலி 20 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார், ரஹானே 15 ரன்னில் வெளியேறிப் போனார். மிக அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் இரட்டை சதத்தினை பூர்த்தி செய்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். அவர் அடுத்து 215  ரன்களில் அவுட் ஆகிப் போனார்.

நேற்றையநாளின் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 502 ரன்கள் எடுத்துள்ளது.

From around the web