நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை படைத்த மலிங்கா

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இலங்கை அணி தனது ஆட்டத்தை துவங்கியது, குனதிலகா 30 ரன்னிலும், டிக்வெலா 24 ரன்னிலும், மதுசனகா 20 ரன்னிலும், ஹசரங்கா 14 ரன்னிலும் ஆகியோர் மட்டுமே ஓரளவு ஆட்டத்தினை ஆடினர், மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு ஆடவில்லை, அதாவது பிற வீரர்கள்
 
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை படைத்த மலிங்கா

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து இலங்கை அணி தனது ஆட்டத்தை துவங்கியது, குனதிலகா 30 ரன்னிலும், டிக்வெலா 24 ரன்னிலும், மதுசனகா 20 ரன்னிலும், ஹசரங்கா 14 ரன்னிலும்  ஆகியோர் மட்டுமே ஓரளவு ஆட்டத்தினை ஆடினர், மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு ஆடவில்லை, அதாவது பிற வீரர்கள் ஒற்றை இலக்கில் மட்டுமே ரன்களைக் குவித்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சாதனை படைத்த மலிங்கா

இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.

மலிங்கா நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மன்ரோவை 12 ரன்களில் போல்டாக்கினார்.


அடுத்து ரூதர்போர்டை ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யு. முறையில் வெளியேற்றினார் மலிங்கா, அடுத்து கிராண்ட்ஹோமை ரன் எதுவும் எடுக்காமல் போல்டாக்கினார்.

அடுத்து ராஸ் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் மலிங்காவிடம் வீழ்ந்தார். சவுத்தி 28 ரன்களில் ஆட்டமிழந்தார், நியூசிலாந்து அணி 16 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

From around the web