மைதானத்தில் மலர்ந்த காதல்: அமெரிக்க கால்பந்து வீரரின் சுவாரஸ்யமான காதல்!

 
love

அமெரிக்க கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் தனது காதலியிடம் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விளையாட்டு மைதானத்தில் காதலை வெளிப்படுத்தும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் தனது காதலியிடம் காதலை புரபோஸ் செய்தது குறித்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது

இந்த நிலையில் அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரராக ஹஸ்ஸானி ஸ்டேபென்சன் என்பவர் நேற்று அமெரிக்காவில் கால்பந்து போட்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும் ஹஸ்ஸானி அந்த மைதானத்திலேயே தனது காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார் 
அவரது காதலி மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டு அந்த காதலை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மைதானத்தில் மலர்ந்த இந்த காதலை அடுத்து அமெரிக்க கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் காதலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

From around the web