சென்னை அணி கப்பலில் ஏராளமான ஓட்டைகள்: தோனி வேதனை!

 

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிகளில் ஒன்று என எதிர்பார்க்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் தல தோனி தலைமையில் இருக்கும் சென்னை அணி தொடர் தோல்விகளை பெற்றுவருகிறது

முதல் போட்டியில் சாம் கர்ரன் அதிரடியாக 16 ரன்கள் அடித்ததாலும், அதன்பின்னர் வாட்சன் மற்றும் டீபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே அடித்து முடித்த போட்டியைத் தவிர மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னை அணி ஃபார்மில் இல்லாததையே இது காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய தோல்விக்குப் பின் பேட்டியளித்த சென்னை அணி கேப்டன் தோனி ’சென்னை அணி என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் விழுந்துள்ளதாக வேதனையுடன் கருத்து தெரிவித்தார். மேலும் கப்பலில் உள்ள ஓட்டையை அடைக்க முயல்வதற்குள் மற்றொரு ஓட்டை விழுந்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு என்னும் ஓட்டை கப்பலை கேப்டன் விராட் கோலி தனியாளாக நின்று அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது போல் சென்னை அணி கப்பலில் ஓட்டை இருந்தாலும் கேப்டன் தோனி அதிரடியாக தனது ஆட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது

தோனி இந்த தொடரில் ஒரு மேட்சில் கூட சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை என்பதும், முதலில் அவர் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web