வாழ்வா? சாவா? போட்டியில் டாஸ் வென்ற டெல்லி!

 

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டிக்கும் முந்தைய போட்டியான இன்று நடைபெறும் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சற்றுமுன் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி என்பது குறிப்பிடதக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெறும் என்பதும், தோல்வியடையும் அணியும் வெளியேற வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இன்றைய போட்டியில் இரு அணிகளில் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு:


டெல்லி அணி: ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரஹானே, ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி, டேனியல் சாம்ஸ்

பெங்களூரு அணி: படிக்கல், ஜோஷ் பிலிபி, விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஷிவம் டூபே, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், அகமது, உடனா, சிராஜ், சாஹல்,

From around the web