ஒரே வெற்றியால் 8ல் இருந்து 4க்கு தாவிய கொல்கத்தா

 

 

இன்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில்  கொல்கத்தா அணி மிக அபாரமாக விளையாடி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த போட்டி ஆரம்பிக்க முன்னர் எட்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தன. இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 

இன்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும் நாளை நடைபெறும் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது இடத்தை பிடிப்பதோடு பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது 

அதன் பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் நாளைய போட்டியில் தோல்வி அடையும் அணியும் கொல்கத்தாவும் இருக்கும். நாளை மறுநாள் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியின் முடிவு தான் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு இடங்களை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கிட்டத்தட்ட இறுதி கட்டம் வந்தபோதிலும் மும்பை தவிர இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இல்லாத ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web