கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் திடீர் விலகல்: என்ன காரணம்?

 

கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தினேஷ் கார்த்திக் திடீரென இன்று அப்பதவியில் இருந்து விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் கொல்கத்தா அணியை கொண்டு சென்றவர் கேப்டன் தினேஷ் கார்த்திக் என்பது தெரிந்ததே. மேலும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் திடீரென கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பதிலாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகியது குறித்து கருத்து தெரிவித்த போது ’தான் பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதாகவும், தனக்கு பதிலாக இயான் மோர்கன் அவர்களை கேப்டன் பதவியில் நியமிக்கபடியும் அவர் கொல்கத்தா அணி நிர்வாகிகளுடன் கேட்டுக்கொண்டுள்ளார்

இயான் மோர்கன் தலைமையில் கொல்கத்தா அணி அடுத்து வரும் போட்டிகளில் எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web