அனுஷ்காவின் பவுலிங்கில் மட்டுமே கோஹ்லி பயிற்சி செய்துள்ளார்: கவாஸ்கர்

 

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது. குறிப்பாக விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விராட் கோலி அவுட் ஆகி திரும்பியவுடன் இந்த போட்டியை வர்ணனை செய்து கொண்டு செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவர்கள் ஊரடங்கின் போது விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் பவுலிங்கில் மட்டும்தான் பயிற்சி செய்துள்ளார். அந்த பயிற்சி மற்றும் அவருக்கு போதாது என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்

கவாஸ்கரின் இந்த அநாகரீகமான விமர்சனத்திற்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் விராத் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். கவாஸ்கர் அவர்களே நீங்கள் விராத்தின் ஆட்டத்தை மட்டும் விமர்சனம் செய்யுங்கள். என்னை ஏன் தேவையில்லாமல் இழுக்கின்றீர்கள். அவருடைய ஆட்டத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒரு வீரரின் ஆட்டத்தை விமர்சிக்கும்போது அந்த வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை தயவுசெய்து இழுக்காதீர்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் அனுஷ்காவின் இந்த பதிலடி தற்போது வைரலாகி வருகிறது

From around the web