ஆட்டத்தையே மாற்றிய கடைசி 3 ஓவர்கள்! கொல்கத்தா அசத்தல் வெற்றி!

ஐபில் தொடரின் 2வது போட்டி கொல்கத்தா அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே கொல்காத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில், ஆண்ட்ரு ரூசல் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளும், பியூஸ் சாவ்லா 3
 
Kolkata knight riders

ஐபில் தொடரின் 2வது போட்டி கொல்கத்தா அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே கொல்காத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது.

ஆட்டத்தையே மாற்றிய கடைசி 3 ஓவர்கள்! கொல்கத்தா அசத்தல் வெற்றி!

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.

கொல்கத்தா அணியில், ஆண்ட்ரு ரூசல் 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளும், பியூஸ் சாவ்லா 3 ஓவர்களில் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் கொல்கத்தா அணி, 182 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்கத்தில் சற்று நிதனாத்துடன் விளையாடிய கொல்கத்தா அணி கடைசி 3 ஓவர்களில் அதிரடி காட்டியது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 54 ரன்களை எடுத்தது. கடைசியாக 2 பந்துகள் இருந்த நிலையில் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றது.

கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புடன் 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

அதிகப்பட்சமாக நிதிஷ் ராணா 47 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார். ஆட்டத்தின் இறுதியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்த ஆண்ட்ரு ரூசல் 19 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார்.இப்போட்டியின் ஆட்ட நாயகனாக ஆண்ட்ரு ரூசல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியை கொல்கத்தா அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

From around the web