வெற்றிக்கு பின் ஆட்டம் போட்ட கேதார் ஜாதவ், பிராவோ: வைரலாகும் வீடியோ!

 

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னை ரசிகர்களுக்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்தது என்பது தெரிந்ததே

10 விக்கெட் வித்தியாசத்தில் விக்கெட் இழப்பின்றி வாட்சன் மற்றும் டூபிளஸ்சிஸ் இந்த போட்டியை முடிப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் அவர்கள் போட்டி முடிந்த பின் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள் 

அந்த வகையில் கேதார் ஜாதவ் மற்றும் பிராவோ ஆகிய இருவரும் நேற்று தாங்கள் தங்கியிருந்த அறையில் ஷாருக்கானின் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நேற்று இரவு முழுவதும் தங்களது வெற்றியை கொண்டாடி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web