இரட்டை சதத்தை நெருங்கிய ஜோரூட்: 400 ரன்களை தாண்டிய இங்கிலாந்து!

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. 

இந்த நிலையில் இன்று மீண்டும் முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி மேலும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து தற்போது நிதானமாகவும் அதே நேரத்தில் ரன்களை அதிகரித்துவருகிறது.

virat

பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் எடுத்து அவுட் ஆன போதிலும் கேப்டன் ஜோ ரூட் மிகவும் பொறுப்பாக விளையாடி 176 ரன்கள் எடுத்துள்ளார். அவர் விரைவில் இரட்டை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்வரை இங்கிலாந்து அணி 133 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 402 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் மிக அதிகமான ஸ்கோரை இங்கிலாந்து அணி எடுத்துள்ளதை அடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியும் தனது பேட்டிங்கில் வலிமையை காட்டினால் மட்டுமே அதிகபட்சம் போட்டியை டிரா செய்ய முடியும் என்பதும் பேட்டிங்கில் சொதப்பினால் இந்திய அணி தோல்வியடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web