கருப்பினத்தவர் மீது தாக்குதல்: அரையிறுதி போட்டியில் இருந்து விலகிய வீராங்கனை!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஒருவர் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் விஸ்கான்சின் பகுதியில் கடந்த ஞாயிறு அன்று ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இனவெறுப்பின் காரணமாக நடைபெற்றதாக கூறப்பட்ட இந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு எதிர்ப்பு
 

கருப்பினத்தவர் மீது தாக்குதல்: அரையிறுதி போட்டியில் இருந்து விலகிய வீராங்கனை!

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஒருவர் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் விஸ்கான்சின் பகுதியில் கடந்த ஞாயிறு அன்று ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இனவெறுப்பின் காரணமாக நடைபெற்றதாக கூறப்பட்ட இந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் கண்டனக்குரல்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த ஒசாக்கா என்ற வீராங்கனை இந்த போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

முதலில் நான் ஒரு கருப்பினத்தவர், அதற்குப் பின்னரே விளையாட்டு வீராங்கனை. என்னுடைய ஆட்டத்தை விட ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதிப்போராட்டத்தின் மீது அதிக கவனம் தேவை எனக் கூறியுள்ளார். ஒசாக்காவை அடுத்து என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரரும் பிளே ஆப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

From around the web