கேப்டன் ரோகித் சர்மாக்கு அபராதம் காரணம் இதுவா?அப்படி என்னதான் ஆச்சு!

மெதுவாக பந்து வீசியதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது!
 
கேப்டன் ரோகித் சர்மாக்கு அபராதம் காரணம் இதுவா?அப்படி என்னதான் ஆச்சு!

கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஐபிஎல். ஐபிஎல் ஆனது இந்திய வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியின் அணித்தலைவராக இருந்து பலப்பரீட்சை மேற்கொண்டு வரும் இந்த கிரிக்கெட் திருவிழாவானது கோடைகாலம் தொடங்கினால் ஆரம்பித்துவிடும். இந்நிலையில் இந்த ஆண்டு கிரிக்கெட் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டு தோல்வியைத் தழுவியது.

mi

தினம்தோறும் இந்த ஐபிஎல் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் நேற்றைய தினம் இந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது டெல்லி அணியுடன் பலப்பரிட்சை மேற்கொண்டது. அதில் மீண்டும் இந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது தோல்வியை தழுவியது. மேலும் இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து வந்தது. மேலும் அவர்கள் குறைந்த ரன்களையே எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தனர். மேலும் நேற்றைய தினம் மும்பை இந்தியன் சார்பில் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே அதிக ரன்களை அடித்திருந்தார்.

மேலும் நேற்றைய தினம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதித்துள்ளது. மேலும் மும்பை பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசியதற்காக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

From around the web