நாளைய சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் இதுவா? பரபரப்பு தகவல்

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் புள்ளி பட்டியலில் தொடர்ந்து எட்டாவது இடத்தில் உள்ளது 

இந்த நிலையில் அணியை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று தோனி அதிரடியாக அணியை மாற்றி உள்ளதாக தெரிகிறது 

தொடக்க ஆட்டக்காரராக வாட்சன் மற்றும் அவருக்கு ஜோடியாக சாம் கர்ரன் களம் இறங்குவார்கள் என தெரிகிறது. இதனை அடுத்து டிபிளஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா ஆகியோர் பேட்ஸ்மேன்களாக களமிறங்குவார்கள்.

அதேபோல் தீபக் சஹார், ஹாசில்வுட், ஷர்துல் தாகூர் மற்றும் கரண்சர்மா ஆகியோர்கள் அணியில் இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த அணி நிச்சயம் வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்யும் என்றும் இறுதிப் போட்டி வரை செல்வதற்கு இந்த அணி உதவும் என்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளைய போட்டியின்போது பார்ப்போம்

From around the web