தள்ளிப் போகிறதா இலங்கை பிரீமியர் லீக்? பரபரப்பு தகவல் 

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போலவே இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் என்ற தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டிகள் நவம்பர் 21ஆம் தேதி இலங்கையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது 

இந்த நிலையில் தற்போது இந்த தொடர் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த போட்டி நடக்கும் இடத்தையும் மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து இலங்கை பிரீமியர் லீக்கின் இயக்குனர் செய்தியாளர்களிடம் பேசியபோது இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்துவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த தொடரை ஐக்கிய அரபு எமிரேட் நாடு அல்லது மலேசியாவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிரீமியர் லீக் தொடர் நடக்கும் உரிய தேதிகள் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த தொடரில் விளையாட ஒப்பந்தமாகியிருந்த ஒருசில முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியும், இந்த தொடர் ஒத்திப்போக ஒரு காரணம் என்று கூறப்படுகிறது

From around the web