இந்திய அணியை விட ஐபிஎல் முக்கியமா? ரோஹித்தை வறுத்தெடுத்த வெங்சர்கார்!

 
இந்திய அணியை விட ஐபிஎல் முக்கியமா? ரோஹித்தை வறுத்தெடுத்த வெங்சர்கார்!

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் காயம் காரணமாக கடந்த சில ஐபிஎல் லீக் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மருத்துவ அறிக்கையில் அவர் ஆறு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டதை அடுத்து அவர் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆறு வார ஓய்வு முடியும் முன்னரே நேற்று அவர் மும்பை அணிக்காக விளையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கார் கூறியபோது ’கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்திய அணியின் மருத்துவர் ரோகித் சர்மாவை 6 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நேற்று அவர் களமிறங்கியுள்ளது வினோதமாக உள்ளது

உடல் தகுதியை பெற்று இந்திய அணியில் விளையாடுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டிய ரோஹித்சர்மா உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருப்பது நிச்சயம் விரும்பத்தக்க ஒன்றல்ல. இது குறித்த பிசிசிஐ சரியான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web