ஐபிஎல் அடுத்து வேர்ல்ட் கப்பு தான் கிரிக்கெட் விரும்பிகள் கொண்டாட்டம்!

சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படும் என பிசிசிஐ முன்மொழிந்து உள்ளது!
 
ஐபிஎல் அடுத்து வேர்ல்ட் கப்பு தான் கிரிக்கெட் விரும்பிகள் கொண்டாட்டம்!

கோடைகாலம் தொடங்கினாலே மக்கள் அனைவரும் மிகுந்த கஷ்டத்திலும் எரிச்சலிலும் இருப்பர். ஆனால் இந்த கோடை காலத்திலும் ஒரு தரப்பினர் மிகவும் மகிழ்ச்சியும் சந்தோசமும் இருப்பர் அவர்கள் யாரென்றால் கிரிக்கெட் விரும்பிகள். கோடைகாலம் தொடங்கினால் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் திருவிழா தொடங்கிவிடும். இதனால் கிரிக்கெட் விரும்பிகள் தங்களது வேலையை விரைவாக முடித்து விட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்து ஐபிஎல் கண்டு மகிழ்ந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டி ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது.

T20

மேலும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் தற்போது நேற்றையதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இத்தகைய மகிழ்ச்சி மத்தியிலும் ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி கிடையாது மிகுந்த சோகத்தை அளித்துள்ளது. ஆயினும் ரசிகர்கள் அதனை பெரிதாக கருதாமல் ஐபிஎல் திருவிழாவை கண்டு மகிழ்கின்றனர்.

 தற்போது கிரிக்கெட் விரும்பிகளுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான வேர்ல்ட் கப் 20 ஓவர் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது கூறியுள்ளது, சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் டி20 உலகக்கோப்பை நடத்தப்படும் என பிசிசிஐ முன்மொழிந்து உள்ளது. மேலும் பெங்களூரு ஹைதராபாத் டெல்லி கொல்கத்தா தர்மசாலா லக்னோ அகமதாபாத்தில் உலக கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது .மேலும் இந்த இதில் 16 அணிகள் விளையாடும் என்றும் கூறியுள்ளது மேலும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கிரிக்கெட் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web