கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்: மீண்டும் தொடங்கப்படுமா?

 
கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் நிறுத்தம்: மீண்டும் தொடங்கப்படுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் இந்தியாவில் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதா? என கண்டனங்கள் குவிந்தது. ஒரு சில வீரர்களும் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

ipl

அதுமட்டுமின்றி கொல்கத்தா வீரர்கள், சென்னை வீரர்கள் உள்பட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதுகுறித்து நீதி மன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக போட்டிகள் நிறுத்தப்படுவதாகவும் வீரர்களின் உடல் நிலை தங்களுக்கு முக்கியம் என்றும் அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது

இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. மீண்டும் இந்த போட்டிகள் தொடங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web