சென்னையில் தொடங்கியது ஐபிஎல் போட்டி: மும்பை பேட்டிங்!

 
சென்னையில் தொடங்கியது ஐபிஎல் போட்டி: மும்பை பேட்டிங்!

இன்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்டது/ இதில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சற்று முன்னர் மும்பை அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் நிதானமாக விளையாடி வருகின்றனர். சற்று முன் வரை மும்பை அணி ஒரு ஓவரில் 5 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இன்றைய போட்டியில் முந்தைய ஆண்டின் சாம்பியனான மும்பை அணி வெல்லும் என்றும் அந்த அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

mumbai

இந்த நிலையில் இன்று விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:

பெங்களூர்: விராத் கோஹ்லி, ரஜத் படிடார், டிவில்லியர்ஸ், மாக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர், ஜேமிசன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டெல், சிராஜ், சாஹல்

மும்பை: ரோஹித் சர்மா, கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, மார்கோ ஜென்சன், ஜெயந்த் யாதவ், டிரெண்ட் போல்ட், பும்ரா

From around the web