ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் மற்றும் இறுதி போட்டி தேதிகள் அறிவிப்பு!

 

ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு அணியும் 11 மற்றும் 12 போட்டிகளில் விளையாடி முடித்து உள்ளன என்பதும் இன்னும் அனைத்து அணிகளுக்கும் இரண்டு அல்லது மூன்று போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் நிர்வாகம் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதிகளை அறிவித்துள்ளது: அதன் விபரம் பின்வருமாறு:

நவம்பர் 5ஆம் தேதி: முதல் பிலே ஆப் போட்டி நடைபெற உள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மோதும் என்பதும் இந்த போட்டியில் துபாயில் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 

நவம்பர் 6ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெறும். இதில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகள் மோதும் என்பதும் அபுதாபியில் இந்த போட்டி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

நவம்பர் 8ஆம் தேதி குவாலிஃபையர் 2 போட்டி நடைபெறும் என்பதும், இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த அணியும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நவம்பர் 10ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும். இந்த போட்டி துபாயில் நடைபெற உள்ளது மேற்கண்ட தகவல்களை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web