இன்று முதல் தொடங்க உள்ளது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா!

இன்றைய தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ளவுள்ளது!
 

இந்தியாவில் கோடைகாலம் என்றாலே அனைவரும் முதலில் நினைப்பது மே மாதம்தான். மே மாதத்தில் வெயிலின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடும். ஆனால் இந்த வெயிலின் தாக்கத்தையும் கிரிக்கெட் பிரியர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். காரணம் என்னவெனில்  கோடை காலம் தொடங்கியதும் நாள் ஐபிஎல் திருவிழாவும் தொடங்கிவிடும். இதனால் கிரிக்கெட் பிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் வேலைக்கு செல்லும் கிரிக்கெட் பிரியர்கள்  சீக்கிரமாக வேலையை முடித்து கிரிக்கெட் திருவிழாவை பார்ப்பார்கள்.

ipl

அதன் மத்தியில் ஐபிஎல் திருவிழாவானது இன்றைய தினம் தொடங்கவுள்ளது. இன்றைய தினத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளன. அதற்கான பலப்பரிட்சை இன்று இரவு சென்னை மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இந்த ஐபிஎல் ஆனது 14வது முறையாக நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஐபிஎல் போட்டிகள் இன்றைய தினம் தொடங்கி மே 30ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. மேலும் இதில் சோகமான செய்தி என்னவென்றால் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளதால் கிரிக்கெட் பிரியர்களுக்கு மைதானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் மைதானங்களில் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் இன்றைய போட்டியில் சிக்சர்மலை பறக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் என்னவெனில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார். மேலும் அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணியில் எதற்கும் அஞ்சாத ஹர்திக் பாண்டியா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web