சென்னையில் இன்று ஐபிஎல் ஏலம்: வீரர்களின் அடிப்படை விலை என்ன?

 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் ஏலம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது இதனை அடுத்து முக்கிய வீரர்களின் அடிப்படை விலை என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

இலங்கையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீகில் விளையாடிய ஈழத்தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த் என்பவர் வரும் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிறார். அவரது ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சமீபத்தில் சையது முஸ்தாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாட்டின் 8 வீரர்கள் ஐபிஎல் ஏல இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த் மணிமாறன், சோனு யாதவ், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், மொகமது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அடிப்படை விலை குறித்த தகவல் இனிமேல் தான் அறிவிக்கப்படும்.

ipl auction

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரது அடிப்படை விலை ரூ.2 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயரும் இன்றும் ஏலத்தில் விடப்படவுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீசாந்த் மற்றும் முரளிவிஜய் ஆகியோர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 1097 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 292 வீரர்களின் பெயர்கள் மட்டுமே இறுதிப்பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web