இந்திய அணியில் இணைந்த ரோஹித் சர்மா: அன்புடன் வரவேற்ற நடராஜன்!

 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரண்டு மாதங்களாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை இந்திய அணியும் வென்றுள்ளது என்பதும், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று உள்ளது என்பதும் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

rohit

இந்த நிலையில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அணியில் இல்லாமல் இருந்த ரோகித் சர்மா தற்போது முழு உடல்தகுதி பெற்று அணியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டார். ரோகித் சர்மா தனிமைப்படுத்தும் காலம் இன்று முடிவடைந்தை அடுத்து தற்போது அணியுடன் இணைந்துள்ளார்

இது குறித்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது என்பதும் நடராஜன் உள்பட அணியில் உள்ள அனைவரும் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து வரவேற்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


 

From around the web