வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!!

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு அணியை தேர்வு செய்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக கூறியுள்ளார் தோனி.. தோனி இந்த தொடரில் இடம்பெறவில்லை என்று கூறிவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் சேர்க்கப்படுகிறார். மாற்று விக்கெட்
 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி மும்பையில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு அணியை தேர்வு செய்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகுவதாக கூறியுள்ளார் தோனி..

தோனி இந்த தொடரில் இடம்பெறவில்லை என்று கூறிவிட்டதால் அவருக்கு பதிலாக ரிஷாப் பன்ட் சேர்க்கப்படுகிறார். மாற்று விக்கெட் கீப்பராக விருத்திமான் சாஹா சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு!!

ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார். டெஸ்ட் தொடரில், கோலி, பும்ரா இணைந்துகொள்ள இருக்கின்றனர். 

ஷிகர் தவான் காயத்தில் இருந்து குணமாகவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக கர்நாடகத் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதை மனதில் கொண்டே அணியின் தேர்வு இருக்கும். அந்த வகையில் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் மற்றும் பிரித்வி ஷா உள்ளிட்டோரில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

From around the web