இந்திய அணி பேட்டிங்! டாஸ் வென்றது இங்கிலாந்து அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்!
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்காக சுற்றுப்பயணம் வந்துள்ளது.  சுற்றுப்பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகள் 5 (20-20) போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மூன்றும் உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

virat

மேலும் 5. 20-20 போட்டிகளில் மூன்றுக்கு 2 கணக்கில் இந்திய அணி இங்கிலாந்து அணி அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. மிகவும் விருப்பமும் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. மேலும் இத்தொடரின் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிக ரன்களை எடுத்து தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இன்று இங்கிலாந்து மற்றும் இந்தியா ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதனை இங்கிலாந்து அணி வென்றது. மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

From around the web