ஊக்கமருந்து சோதனையில் மாட்டிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்த பிரித்வி ஷா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியின் போது அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு
 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இந்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்த பிரித்வி ஷா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியின் போது அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ‘டெர்புடாலின்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

ஊக்கமருந்து சோதனையில் மாட்டிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா

பிரித்வி ஷா அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட 8 மாதம் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது இடைநீக்கம் காலம் கடந்த மார்ச் 16-ந் தேதி தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

பிரித்வி ஷாவை தவிர கிரிக்கெட் வீரர்கள் அக்‌ஷய் துலர்வார் (விதர்பா), திவ்யா காஜ்ராஜ் (ராஜஸ்தான்) ஆகியோரும் ஊக்கமருந்து விதிமுறையை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு முறையே 8 மாதம் மற்றும் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது.

From around the web