இந்திய பேட்டிங் அதிரடி! இங்கிலாந்துக்கு 318 ரன்கள் இலக்கு!

50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது இந்திய அணி!
 
இந்திய பேட்டிங் அதிரடி! இங்கிலாந்துக்கு 318 ரன்கள் இலக்கு!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி .அதனால் இந்தியாவுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி, 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுடன் போட்டி போட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதன்படி ம முதலில் டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 3-1 கணக்கில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது.

india

பின்னர் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடைபெற்றது. இந்த 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி ஆனது 3க்கு 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக வீழ்த்தியது. மேலும் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறும் என்று அறிவித்த நிலையில் தற்போது இன்று முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி.

இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 317 ரன்கள் எடுத்தது. இதில் இந்தியாவில் அதிகபட்சமாக ஷிகர் தவன் 98 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் கே எல் ராகுல் 62 ரன்களும்,  குர்னால் பாண்டிய 58 ரன்களும், கேப்டன் விராட் கோலி 56 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களை எடுத்தது .இதனால் இங்கிலாந்து 318 என்ற இலக்கை எதிர்கொள்ள உள்ளது..

From around the web