இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்: சிட்னியில் பார்வையாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டது என்பதும் மூன்றாவது டெஸ்ட் நாளை முதல் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது என்பதும் சிட்னியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது 

இந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

cricket

மொத்தம் 25 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் அனைவரும் போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது 

மேலும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற எந்த நிபந்தனையும் இல்லாத நிலையில் நாளைய போட்டியில் மட்டும் பார்வையாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web