வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. இந்திய அணியின் 2-வது இன்னிங்சை தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் தொடங்க, மயங்க் அகர்வால் 16 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரஹானே 48 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். 3-வது நாள் ஆட்ட நேர
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன.

இந்திய அணியின் 2-வது இன்னிங்சை தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் தொடங்க, மயங்க் அகர்வால் 16 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 38 ரன்னிலும், புஜாரா 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றிரஹானே 48 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. கோலி 51 ரன்களுடனும், ரஹானே 53 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 

4-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். கேப்டன் விராட் கோலி 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஹானே 102 ரன்னில் அவுட் ஆனார். விஹாரி 93 ரன்களிலும், ரிஷாப் பண்ட் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 343 ரன்கள் சேர்த்தது.

அதன்பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சொதப்பலான துவக்கத்தை கொடுத்தது.

அந்த அணியில் பிராத் வெயிட் 1 ரன்னிலும், ஜான் சேப்பல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டிஸ் அணியில் புரூக்ஸ் 2 ரன்னிலும், ஹெட்மயர் 1 ரன்னிலும், டேரன் பிராவோ 2 ரன்னிலும், ஷாய் ஹோப் 2 ரன்னிலும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

 ரோஸ்டன் சேஸ் 12 ரன்னிலும், கேப்ரியல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேமர் ரோச் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது.

From around the web