எங்ககிட்டயேவா… மறக்க முடியாத பதிலடி கொடுத்த இந்தியா!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் ஒரு மாற்றமாக ஷிவம் துபேவுக்கு பதில், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றதன்மூலம் பீல்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணியை பேட்டிங்க் செய்ய பணித்தது. லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் துவக்கம்
 
எங்க்கிட்டயேவா… மறக்க முடியாத பதிலடி கொடுத்த இந்தியா!!


வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது, இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

இந்திய அணியில் ஒரு மாற்றமாக ஷிவம் துபேவுக்கு பதில், ஷர்துல் தாகூருக்கு இடம் கிடைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றதன்மூலம் பீல்டிங்கை தேர்வு செய்து, இந்திய அணியை பேட்டிங்க் செய்ய பணித்தது.

லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் துவக்கம் முதலே பிச்சி பிதறிவிட்டார்.

ரோகித் சர்மா மிகவும் சீரான வேகத்தில் ஆடி, ரன்களைக் குவித்தார். ரோகித் சர்மா 70 ரன்னில் ஹெட்மயர் கையில் அவுட் ஆகிடும் சூழலில் பந்து நழுவிச் செல்ல ரோகித்துக்கு 2 ஆம் வாய்ப்பு கிடைத்தது.

எங்ககிட்டயேவா… மறக்க முடியாத பதிலடி கொடுத்த இந்தியா!!

ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும் சதத்தினைப் பூர்த்தி செய்து, ரன் வேட்டை நடத்தினர்.

அடுத்து ராகுல் ஷாக் கொடுக்கும் வகையில் 102 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கோலி, சும்மா பிசிறு தட்டுவார் என்று எதிர்பார்க்கையில் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார், அதே சமயம் ரோகித் சர்மா 159 ரன்களில் வெளியேறினார்.

ஸ்ரேயாஷ்க்கு கம்பெனி கொடுக்க  ரிஷாப் பண்ட் களமிறங்கி வசூல் வேட்டை நடத்தினர். ரிஷாப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 53 ரன்களுடனும் இருந்தனர்.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்தது.
அடுத்து 388 என்ற இலக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஹெட்மயர் 3 ரன்னில் ரன்-அவுட் ஆக, வழக்கம்போல் ஷாய் ஹோப் – நிகோலஸ் பூரன் ஜோடி அதிரடி காட்டியது.

இந்த ஜோடி பிரிந்ததும், இந்திய அணியின் வேலை குறைந்தது பூரன் 75 ரன்களிலும், பொல்லார்ட் ரன் ஏதும் எடுக்காமலும், ஷாய் ஹோப் 78 ரன்களிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் 280 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆகியுள்ளது.

From around the web