விஸ்வரூபம் எடுத்த இந்திய அணி: ஐந்திலும் வெற்றி பெற்று சாதனை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி புதிய சரித்திர சாதனை செய்துள்ளது. இந்திய அணியின் விஸ்வரூபத்தை பார்த்து மற்ற நாட்டு அணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான நான்கு டி-20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று 5வது போட்டியிலும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்கள்
 
விஸ்வரூபம் எடுத்த இந்திய அணி: ஐந்திலும் வெற்றி பெற்று சாதனை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து டி20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி புதிய சரித்திர சாதனை செய்துள்ளது. இந்திய அணியின் விஸ்வரூபத்தை பார்த்து மற்ற நாட்டு அணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான நான்கு டி-20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று 5வது போட்டியிலும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்கள் எடுத்த நிலையில் 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இந்திய அணியின் பும்ரா மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சயினி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்து அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆட்டநாயகன்: பும்ரா
தொடர் நாயகன்: கே.எல்.ராகுல்

From around the web