இன்று நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. 20 ஓவர் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அதே போன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம் காட்டும். 4-வது வரிசையில் யார்
 

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தி விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.


இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. 20 ஓவர் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அதே போன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம் காட்டும்.


4-வது வரிசையில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்தாலும், லோகேஷ் ராகுல் அந்த வரிசையில் களம் காணவே அதிக வாய்ப்புள்ளது. கடைசி 20 ஓவர் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுவின் அதிரடி இந்த ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இன்று நடக்கவுள்ள இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

 ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருப்பதால் முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோருடன் நவ்தீப் சைனி ஒரு நாள் போட்டியிலும் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜாசன் ஹோல்டர் தலைமையில் களம் இறங்குகிறது. கனடாவில் கிரிக்கெட் போட்டியில் ஆடியதால் 20 ஓவர் தொடரில் ஆடுவதை தவிர்த்த கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் ஆடுகிறார். இந்த தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருப்பதால் கிறிஸ் கெய்ல் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவார்.


இவ்விரு அணிகளும் இதுவரை 127 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 60-ல் இந்தியாவும், 62-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் முடிவு இல்லை.

From around the web