2வது அணியாக செமி பைனலுக்குள் இந்தியா.. வாழ்த்துகள் மழை!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் முக்கியமான கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்தியா உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கும் என்பது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயமாகும். அதனை நிரூபிக்கும் விதமாக இந்தியா இந்த உலகக்கோப்பைத் தொடரில் வெற்றி வாகை சூடி வந்தது. பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தியது: தென்னாப்பிரிக்கா வெற்றி, ஆஸ்திரேலியா வெற்றி, பாகிஸ்தான் போன்ற பலம் பொருந்திய அணிகளை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை நோக்கி முன்னேறியது. நியூசிலாந்து அணிக்கு
 
2வது அணியாக செமி பைனலுக்குள் இந்தியா.. வாழ்த்துகள் மழை!

லண்டன்:

உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் முக்கியமான கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்தியா உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கும் என்பது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயமாகும். அதனை நிரூபிக்கும் விதமாக இந்தியா இந்த உலகக்கோப்பைத் தொடரில் வெற்றி வாகை சூடி வந்தது.

பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தியது:

தென்னாப்பிரிக்கா வெற்றி, ஆஸ்திரேலியா வெற்றி, பாகிஸ்தான் போன்ற பலம் பொருந்திய அணிகளை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை நோக்கி முன்னேறியது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக தடைபட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சற்றே திணறினாலும் கடைசி நேரத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

2வது அணியாக செமி பைனலுக்குள் இந்தியா.. வாழ்த்துகள் மழை!

இந்திய அணிக்கு ஏற்பட்ட கண்திருஷ்டி:

இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. தோல்வியே அடையாமல் வெற்றிகளைமட்டுமே குவித்து வந்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இது இந்திய அணிக்கு ஏற்பட்ட கண்திருஷ்டி என்கின்றனர் ரசிகர்கள்.

செமிபைனலுக்குள் இந்திய அணி:

தற்போது வங்கதேசம் அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்று இருக்கிறது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. இந்தியா, 315 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி வங்கதேசம் ஆடியது. கடைசியில் 286 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 1 போட்டி மழையால் தடைபட்டு 1 போட்டி தோல்வி என்று இந்தியா 13 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி செமி பைனலுக்கு இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web