முதல் போட்டியில் சதமடித்த இந்திய இளம் வீரர்: மே.இ.தீவுகள் திணறல்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி இதுவரை 50 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. பிரித்வி ஷா முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 134 ரன்கள் எடுத்து இன்னும் ஆடி வருகிறார். அறிமுகமான முதல் போட்டியில் சதமடித்த பிரித்விக்கு
 

முதல் போட்டியில் சதமடித்த இந்திய இளம் வீரர்: மே.இ.தீவுகள் திணறல்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி இதுவரை 50 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. பிரித்வி ஷா முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 134 ரன்கள் எடுத்து இன்னும் ஆடி வருகிறார். அறிமுகமான முதல் போட்டியில் சதமடித்த பிரித்விக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மேலும் புஜாரே 86 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார். கேப்டான் விராத் கோஹ்லி 4 ரன்களுடனும் ஆடி வருகிறார்.

From around the web