மோசமான ஆட்டத்தால் அரைஇறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி

மான்செஸ்டர்: இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை ஏன் இப்படி செய்தது: டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தை தொடர இயலவில்லை. அரைஇறுதிசுற்றுக்கு ரிசர்வ் டேஉண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்து
 

மான்செஸ்டர்:

இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

மழை ஏன் இப்படி செய்தது:

டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் அதன் பிறகு ஆட்டத்தை தொடர இயலவில்லை.

அரைஇறுதிசுற்றுக்கு ரிசர்வ் டேஉண்டு என்பதால் மறுநாள் இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மோசமான ஆட்டத்தால் அரைஇறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி

நியூசிலாந்து அணி:

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது.

வீர்ர்களின் சொதப்பல் ஆட்டம்:

240 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்தியா ஆடியது. ரோகித் சர்மா முதல் ரன்ணிலேயே விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய இந்திய கேப்டன் விராட் கோலி 1 ரன்னிலேயே  எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார்.

அடுத்து லோகேஷ் ராகுல் 1 ரன்னில் விக்கெட் கீப்பர் லாதமிடம் பிடிபட்டார். கார்த்திக் 6 ரன்களில் ஹென்றி வீசிய பந்தை, ஜேம்ஸ் நீ‌ஷம் கேட்ச் செய்தார்.

ஸ்கோர் 71 ரன்களை  எட்டிய போது ரிஷாப் பண்ட் 32 ரன்களில் கேட்ச் ஆனார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் 32 ரன்களில் அவுட் ஆனார். ஜடேஜா 77 ரன்களில் கேட்ச் ஆனார். போராடிய டோனி 50 ரன்னில் ரன்–அவுட் ஆனார்.

வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி :

இறுதி ஓவரில் வெற்றிக்கு 23 ரன் தேவையாக இருந்த போது பவுண்டரி அடித்த யுஸ்வேந்திர சாஹல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

18 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய நியூசிலாந்து அணி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்பது இது 4–வது நிகழ்வாகும். ஏற்கனவே 1987, 1996, 2015–ம் ஆண்டுகளிலும் அரைஇறுதியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

From around the web