36 ரன்களில் இந்தியா ஆல்-அவுட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்த இந்திய அணி இரண்டாவது அணியில் மிக மோசமாக விளையாடி 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது 

aus win1

இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 96 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஒரு அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் 90 ரன்க்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி சற்று முன் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 93 ரன்கள் எடுத்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ்கில் ஆஸ்திரேலியாவின் பர்ன்ஸ் 51 ரன்கள் அடித்தார் என்பதும், மாத்யூ வஏட் 33 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web