இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 277/5: ரஹானே அபார சதம்!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்த 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 36 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது 

இந்த நிலையில் இன்றைய 2-வது நாளில் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி பொறுப்புடன் விளையாடி 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. குறிப்பாக கேப்டன் ரகானே மிக அபாரமாக விளையாடி 104 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக மிகவும் பொறுப்பாக விளையாடிய ஜடேஜா 40 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

rahane century1

தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட 82 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது/ இன்னும் மூன்று நாள் மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web