IND vs SL - வீரர்கள் அறிவிப்பு

 
Ind vs sri

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடர் போட்டியின் இறுதி போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி விரைவில் தொடங்க உள்ளது 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு பிரிவு இலங்கை செல்ல உள்ளது என்பதும் இந்த அணி இலங்கையில் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்தியாவின் இரண்டாவது அணி அமைக்கப்பட்டு அதற்கு ஷிகர் தவான் கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ராகுல் டிராவிட் இந்த அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு: ஷிகர் தவான், புவனேஷ் குமார், பிபி ஷா, படிக்கல், கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், எம். பாண்டே,  நிதீஷ் ரானா, இஷான் கிஷான், சாம்சன், சாஹல், ஆர்.சஹார், கௌதம், கே. பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹர், சயினி மற்றும் சகாரியா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web