பாக்கத்தான போறிங்க இந்த காளியோட ஆட்டத்தை: தமிழ் டுவிட்டை ஆரம்பித்த இம்ரான் தாஹிர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களாகிய ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐபிஎல் போட்டி நடக்கும்போது மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் தமிழில் அவ்வப்போது டுவிட்டுக்களை பதிவு செய்து தமிழ் மக்களை மகிழ்வித்து வருவார்கள் என்பது தெரிந்ததே இந்த நிலையில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இடம்
 

பாக்கத்தான போறிங்க இந்த காளியோட ஆட்டத்தை: தமிழ் டுவிட்டை ஆரம்பித்த இம்ரான் தாஹிர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களாகிய ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐபிஎல் போட்டி நடக்கும்போது மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் தமிழில் அவ்வப்போது டுவிட்டுக்களை பதிவு செய்து தமிழ் மக்களை மகிழ்வித்து வருவார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இம்ரான் தாஹிர் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இம்ரான் தாஹிர் வழக்கம்போல் தனது தமிழ் டுவிட்டுக்களை தொடங்கிவிட்டார். சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்றில், ‘என் இனிய தமிழ் மக்களே! உங்கள் நலம், நலம் அறிய ஆவல்! பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசியுடன்! பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்தை… எடுடா வண்டிய போடுடா விசில.. என்று பதிவு செய்துள்ளார் இம்ரான் தாகிர் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

From around the web